Thursday, April 26, 2012

ஆலு கேப்ஸிகம் மசாலா / Aalu Capsicum Masala

தேவையானவை

 குடைமிளகாய் - 2
 வேகவைத்த உருளைக்கிழங்கு - 1
 வெங்காயம் - 1
 தக்காளி - 2
 மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
 கறிபொடி - 1/2 ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
 கடுகு - 1/4 ஸ்பூன்
 கருவேப்பிலை - சிறிது
 உப்பு - தேவையான அளவு
 அரைக்க
 தேங்காய் துருவல் - 1 மேசைக்கரண்டி
 வேர்க்கடலை - ஒருகை
 காய்ந்த மிளகாய் - 3
 சீரகம் - ஒரு தேக்கரண்டி

 செய்முறை

 தேவையான பொருட்களை முதலில் எடுத்து வைக்கவும்.
அரைக்க வேண்டியதை அரைத்து கொள்ளவும்.
வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு,கருவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம் சேர்த்து பாதி வதங்கியதும் மிளகாய் தூள்,கறிபொடி போட்டு
பின் தக்காளி சேர்த்து நன்றாக வதங்கியவுடன்
வெட்டிய குடைமிளகாய்,வேகவைத்த உருளைக்கிழங்கு,உப்பு சேர்த்து கிளறி மூடிபோட்டு 5 நிமிடம் வேகவிடவும்.
5 நிமிடம் கழித்து அரைத்த விழுதை சேர்த்து
பின் அத்துடன் 1 கப் தண்ணீர் விட்டு மூடி வேகவிடவும்.
கிரேவி சற்று கெட்டியான பதம் வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கி வைக்கவும்.சுவையான ஆலு கேப்ஸிகம் மசாலா தயார்.
இது சப்பாத்தி,பூரிக்கு சுவையான சைட் டிஷ்.

Saturday, March 31, 2012

லெபனீஸ் சீஸ் பை / Lebanese Cheese Pie




தேவையானவை

மைதா மாவு - 4 கப் (all purpose flour)
பேக்கிங் பவுடர் - 1 1/2 டீஸ்பூன்
மிதமான சூடுள்ள தண்ணீர் - 1 1/2 கப்
சீனி - 2 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
ஈஸ்ட் - 2 டீஸ்பூன்
ஆயில் - 1/2 கப்

ஸ்டப்பிங் செய்ய:

கட் செய்த மொற்சரில்லா சீஸ் (mozzarella cheese)
ஃபிட்ட சீஸ் (feta cheese)
கொத்தமல்லி - சிறிது

செய்முறை

மிதமான சூடுள்ள தண்ணீரில் ஈஸ்ட் போட்டு கலந்து 5 நிமிடங்களுக்கு அப்படியே வைத்திருக்கவும்.மாவுடன் உப்பு,சீனி,பேக்கிங் பவுடர் சேர்த்து கலந்து வைக்கவும்.

பின் அதில் ஈஸ்ட் கரைசலை ஊற்றி அத்துடன் ஆயில் சேர்த்து சாப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு அழுத்தி பிசைந்துக் கொள்ளவும்.

பின்னர் ஒரு எண்ணெய் தடவிய பாத்திரத்தில் பிசைந்த மாவை போட்டு 4 மணி நேரம் மிதமான சூடுள்ள இடத்தில் வைத்திருக்கவும்.பின் ஒரு பாத்திரத்தில் கட் செய்த மொற்சரில்லா சீஸ்,உதிர்த்த ஃபிட்ட சீஸ்,பொடியாக வெட்டிய கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.

பின் மாவை நான்கில் ஒரு பங்கை எடுத்து உருட்டி அதனை சிறிது தடினமாக சப்பாத்தி கட்டையால் பெரிதாக தேய்த்து,அதன்பின் தேய்த்த மாவின் மேல் ஒரு மூடியை வைத்து கத்தியால் ரவுன்டாக வெட்டி கொள்ளவும்.

மாவின் நடுவில் கால் டீஸ்பூன் ஆயில் விடவும்.

அதன்மேல் ஒரு தேக்கரண்டி சீஸ் கலவையை வைத்து,சிறிது மைதாமாவை தண்ணீரில் கலந்து பேஸ்ட்டாக்கி ஓரம் முழுவதும் தடவும்.

பின் படத்தில் இருப்பது போல் இருபுறமும் மடக்கிவிடவும்.

அதேபோல் அடுத்தபுறமும் மடக்கிவிட்டால் இதுமாதிரி சதுரவடிவில் பைபோல் கிடைக்கும்.

பின்னர் அதனை ஆயில் தடவிய ட்ரேயில் வைத்து 325 டிகிரி முற்ச்சூடு செய்த்த ஓவனில் 15 அல்லது 20 நிமிடம் வைத்து எடுக்கவும்.

சுவையான ஸ்டப்டு சீஸ் பை ரெடி.

இதனை பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு லன்ஞ்க்கு ஏற்றது.

ப்ரிஜரில் வைத்து வேண்டும்பொழுது மைக்ரோ ஓவனில் சூடு செய்தும் கொடுக்களாம்.மிகவும் சுவையாக இருக்கும்.


குறிப்பு :
இதில் பேக்கிங் பவுடர் சேர்த்து இருப்பதால் சீக்கிரமாக கீழ்பகுதி கறுகிபோய்விடும்.அதனால் அவ்வபொழுது கீழே கறுகிவிடாமல் பார்த்துக்கொள்ளவும்.

ஒரு வருடம் நிறைவு பெறுகிறது! Happy Birthday



இன்றுடன் இந்த ப்ளாக் ஆரம்பித்து சரியாக ஒரு வருடம் நிறைவு பெறுகிறது!



என்ன, நூறு பதிவுகள் எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டேன் ஆனால் முடியவில்லை!



உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் என் மனமார்ந்த நன்றிகள் !!!

Wednesday, March 14, 2012

நண்டு மசாலா / Crab Masala




தேவையானவை

நண்டு - 7
வெங்காயம் - 1
தக்காளி - 2
சோம்பு - 1/2 தேக்கரண்டி
பட்டை - 2
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 1
புளி - சிறிய கோலி அளவு
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
மல்லி இலை,கறிவேப்பிலை - சிறிதளவு

அரைக்க:

தேங்காய் துருவல் - 1/2 கப்
சோம்பு - 1 தேக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
மல்லித் தூள் - 3 தேக்கரண்டி

செய்முறை

நண்டை வெட்டி நன்கு சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.

அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நைசாக அரைத்து வைக்கவும்.

வெங்காயம்,தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும் பட்டை,சோம்பு மல்லி இலை,கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

பின் நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய்,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சைவாசனை போக வதக்கவும்.

அத்துடன் மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள்,கறிமசால தூள் சேர்க்கவும்.

பின் பின் தக்காளி சேர்த்து வதக்கி எண்ணெய் பிரிந்ததும் அரைத்த விழுதையும் சேர்த்து பத்து நிமிடம் வதக்கவும்.

எல்லாம் சேர்ந்து வதங்கியதும் நண்டை சேர்க்கவும்.

புளியை அரைகப் தண்ணீரில் கரைத்து ஊற்றி நன்றாக வேக வைக்கவும்.

நன்றாக வெந்து சுருள சுருள கிண்டி கொத்தமல்லித் தழை தூவி இறக்கி வைக்கவும்.

Sunday, March 11, 2012

'பழங்களின் அரசன் பலா'



எனக்கு பலாப்பழம் ரொம்ப பிடிக்கும்.

இங்கே ஃப்ரெஷ் பழம் கிடைக்கிறது அறிது,அதனால் கிடைத்தவுடன் வாங்கிவிட்டேன்.

இந்த பலாப்பழ சுளைகள் தேன் போன்று இனிப்பாக இருந்தது.

பலாப்பழத்தில் விட்டமின் ஏ, பொட்டாசியம்,கல்சியம்,பாஸ்பரஸ் சத்துக்கள் அதிகம் உள்ளது.அதனால் வந்து ஆளுக்கு ஒன்று எடுத்துக் கொள்ளுங்கள்.

Saturday, March 3, 2012

கேரட் கேக் / Whole Wheat Carrot Cake



தேவையானவை

ஹோல்வீட் ப்ஃளவர் (Whole Wheat) - 2 கப்
துருவிய கேரட் - 2 (2 கப்)
ப்ரெளன் சுகர் - 3/4 கப்
பால் - 1/4 கப்
பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி
பேக்கிங் சோடா - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 3/4 கப்
முட்டை - 2
ஜாதிக்காய் பொடி (nutmeg) - 1/2 தேக்கரண்டி (விரும்பினால்)
பட்டை பொடி - 1 தேக்கரண்டி
உப்பு - 1/4 தேக்கரண்டி

ப்ராஸ்ட்டிங் செய்ய

வெண்ணெய் - 1/2 கப் (ரூம் டெம்ப்பரேச்சர்)
ஐசிங்சுகர் (பவுடர் சுகர்) - 1/2 கப்
வென்னிலா எசன்ஸ் - 1/2 தேக்கரண்டி
கோகோனட் பவுடர் - 2 தேக்கரண்டி

செய்முறை

மாவுடன் பேக்கிங் பவுடர்,பேக்கிங் சோடா,ஜாதிக்காய் பொடி,பட்டை பொடி,உப்பு சேர்த்து சலித்துக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் ப்ரெளன் சுகர்,முட்டை,எண்ணெய் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.

பின் பால் சேர்த்து மீண்டும் ஒருமுறை அடித்துக் கொள்ளவும்.

அந்த கலவையில் சலித்து வைத்திருக்கும் மாவு சேர்த்து அடிக்கவும்.

பின்பு துருவிய கேரட்டை சேர்க்கவும்.

பின் கரண்டியால் மென்மையாக கலக்கவும்.

ஓவனை 350 டிகிரி F முற்சூடு செய்யவும்.ஒரு பட்டர் தடவிய பேக்கிங் ட்ரேயில் கேரட் கலவையை அதில் ஊற்றி 350 டிகிரி F 40 நிமிடம் பேக் செய்யவும்.

இடையில் டூத்பிக்கில் குத்திபார்த்தால் மாவு ஒட்டாமல்வரும் அதுதான் பதம் எடுத்து ஆறவிடவும்.

இதனை கட் செய்து அப்படியே சாப்பிடளாம்.விரும்பினால் ஃப்ராஸ்ட்டிங்கும் செய்தும் சாப்பிடளாம்.


ஒரு பாத்திரத்தில் ரூம் டெம்ப்பரேச்சரில் உள்ள வெண்ணெய், பவுடர்ட் சுகர்,வென்னிலா எசன்ஸ்,கோகோனட் பவுடர் சேர்த்து நன்கு பீட் செய்து கொள்ளவும்.

கேக் நன்கு ஆறிய பின் கேக்கின் மேல் இந்த க்ரீமை பூசவும்.

பின்னர் கேக்கை விரும்பியவாறு அலங்கரித்து கட் செய்து கொள்ளவும்.